விம்பிள்டன் டென்னிஸ்! 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்!

 
விம்பிள்டன் டென்னிஸ்! 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியில், உலக தர வரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சும், 7வது இடத்தில் உள்ள இத்தாலி வீரர் மட்டியோ பெர்ரெட்டினியும் மோதினார்கள்.

ஆட்டம் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. 7-6 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை பெர்ரெட்டினி கைப்பற்றினார். ஆனால் அடுத்த மூன்று செட்களில் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தி 6-7,6-4,6-4,6-3 என்ற கணக்கில் பெர்ரெட்டினியைத் தோற்கடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். இது ஜோகோவிச் கைப்பற்றும் 6வது விம்பிள்டன் பட்டம்.

From around the web