ஐ.பி.எல்.-லை தொடர்ந்து உலகக் கோப்பையும் மாற்றம்! இந்தியாவிற்கு கோடிக்கணக்கில் இழப்பு!

 
ஐ.பி.எல்.-லை தொடர்ந்து உலகக் கோப்பையும் மாற்றம்! இந்தியாவிற்கு கோடிக்கணக்கில் இழப்பு!

இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக 16 அணிகள் பங்கேற்கும் 7வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்றாற் போல் 20 ஓவர் உலக கோப்பையை நடத்தும் முடிவை எடுக்க ஒரு மாதம் அவகாசம் வழங்க பி.சி.சி.ஐ.-யின் கோரிக்கையை ஐ.சி.சி.

ஏற்றுக்கொண்டது.இந்தியாவில் போட்டியை நடத்துவது குறித்து ஜூன் 28க்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது இந்தியாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை எனவும், அமீரகத்தில் போட்டியை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க ஐ.சி.சி. திட்டமிட்டு வருகிறது. மேலும் மஸ்கட்டில் தொடக்க சுற்று ஆட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பில் ‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து முடிவெடுக்க 4 வாரம் அவகாசம் வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது. போட்டி அமீரகத்தில் நடைபெறுவது குறித்து கிரிக்கெட் வாரியம் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகள் அமீரகத்தில் அக்டோபர் 10க்குள் நடத்தி முடிக்கப்பட்டால் தான் , 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளை நவம்பர் மாதத்தில் தொடங்க முடியும். அக்டோபரில் தொடங்கும் உலக கோப்பை போட்டி காலத்தில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
இது தவிர இந்தியாவில் கொரோனா சூழ்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வந்து விளையாட தயக்கம் காட்டுவார்கள். ஆனால் ஐ.பி.எல். போட்டிகளுடன், 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் அமீரகத்தில் நடத்தப்பட்டால் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web