உலக கோப்பை கால்பந்து போட்டி: தகுதி சுற்றிலே வெளியேறிய இந்திய கால்பந்து அணி

 
உலக கோப்பை கால்பந்து போட்டி: தகுதி சுற்றிலே வெளியேறிய இந்திய கால்பந்து அணி

2022-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெறுகிறது. இதில் ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி லீக் எதிர்வரும் ஆட்டங்களில் ஜூன் 3-ந் தேதி கத்தாரையும், ஜூன் 7-ந் தேதி வங்காளதேசத்தையும், ஜூன் 15-ந் தேதி ஆப்கானிஸ்தானையும் சந்திக்கிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டி: தகுதி சுற்றிலே வெளியேறிய இந்திய கால்பந்து அணி

இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில், 3 டிரா, 2 தோல்வியுடன் இந்திய அணி 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் 4-வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் உலக கோப்பை போட்டிக்கான வாய்ப்பை இழந்து விட்ட இந்திய அணி 2023-ம் ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டி: தகுதி சுற்றிலே வெளியேறிய இந்திய கால்பந்து அணி

இதையொட்டி இந்திய அணியின் பயிற்சி முகாம் கொல்கத்தாவில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி நடக்க இருந்தது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இந்த பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த போட்டிக்கு தயாராகுவதற்காக இந்திய கால்பந்து அணி முன்கூட்டியே தோகா சென்று பயிற்சியில் ஈடுபட முடிவு செய்து கடந்த புதன்கிழமை டெல்லியில் இருந்து புறப்பட்டு தோகா சென்றடைந்தது.

தோகாவில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இந்திய கால்பந்து அணியின் 28 வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து இந்திய அணியினர் நேற்று முன்தினம் தங்களது பயிற்சி முகாமை தொடங்கினர். தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் மேற்பார்வையில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web