மல்யுத்த வீரர் சுஷில் குமார் அதிரடியாக கைது

 
மல்யுத்த வீரர் சுஷில் குமார் அதிரடியாக கைது

ஒலிம்பிக்கில் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தங்கார் (வயது 23) என்பவருக்கும் முன்விரோதம் காரணமா கடந்த 4ந்தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சாகர் தங்கார் கடுமையாக தாக்கப்பட்டார்.

மல்யுத்த வீரர் சுஷில் குமார் அதிரடியாக கைது

பலத்த காயமடைந்த சாகர் தங்காரை அவரது நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இது தொடர்பாக சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, சாகர் தான்கெட் உயிரிழந்ததைக் கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடிவந்தனர்.

மல்யுத்த வீரர் சுஷில் குமார் அதிரடியாக கைது

கடந்த இரு வாரங்களாக தனிப்படை அமைத்து ஹரியாணா, உத்தரகாண்ட் எனப் பல்வேறு மாநிலங்களில் சுஷில் குமாரை தேடி வந்தனர். இதற்கிடையே, மல்யுத்த வீரர் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்தனர்.

இந்நிலையில் இன்று டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு, சுஷில் குமாரை ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

From around the web