இன்று முதல் வங்கிகள் வேலை நேரத்தில் அதிரடி மாற்றம்!

 
இன்று முதல் வங்கிகள் வேலை நேரத்தில் அதிரடி மாற்றம்!

தமிழகத்தின் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலையை தடுக்கும் பொருட்டு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 7 வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரையில் நீட்டிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளா

இன்று முதல் வங்கிகள் வேலை நேரத்தில் அதிரடி மாற்றம்!

இந்த நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாலை 5 மணி வரையில் கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ள 11 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. காய்கறிகள், பூ, பழங்கள், மளிகைப் பொருட்களை மாலை 5 மணி வரையில் விற்பனைச் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் வங்கிகள் தினமும் இந்த ஊரடங்கு காலத்திலும் மாலை 4 மணி வரை செயல்படும் என்று தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. இதில் பணப்பரிவர்த்தனைகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் வழக்கமான சேவைகள் கையாளப்படும். அதே போல், அனைத்து வங்கிகளின் ஏடிஎம் சேவைகளிலும் மாற்றங்கள் இல்லாமல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web