சிமெண்ட் மூட்டைக்கு 150 உயர்வு

 
சிமெண்ட் மூட்டைக்கு 150 உயர்வு

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் மாநிலங்களவை, நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்..

சிமெண்ட் மூட்டைக்கு 150 உயர்வு

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை கடந்த சில நாட்களில் மூட்டை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது நியாயமற்றது. இது கட்டுமானத் தொழிலை நேரடியாகவும், அதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கும்!

ஊரடங்கு காரணமாகவே சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுவது தவறு. ஊரடங்கு காலத்தில் உற்பத்தி தடைபடவில்லை; தேவை குறைந்துள்ளது. அத்தகைய சூழலில் விலை குறையாமல் அதிகரிப்பது வினோதம்!

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218 என்ற விலையிலான அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்) விற்பனையை அதிகரித்து விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்!

From around the web