இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

 
இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

சென்னை அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதை தொடர்ந்து 9 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்றது.

இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

இந்நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க-வின் 73 மாவட்ட செயலாளர்கள், 65 சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு, போட்டியிடுவோரின் விருப்பங்களை கேட்டறிவது, தேர்தலை எவ்வாறு அணுகுவது உள்ளிட்ட பல்வெறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகின்றன.

இன்று அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- முழு விபரம்..!!

ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கட்சிக்கான அவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web