பிறப்பு, இறப்பு பதிவு காலதாமதக் கட்டணம் விலக்கு! மு.க.ஸ்டாலின்!

 
பிறப்பு, இறப்பு பதிவு காலதாமதக் கட்டணம் விலக்கு! மு.க.ஸ்டாலின்!


தமிழகத்தில் பிறப்பு, இறப்பு நிகழ்வுகள் குறித்து 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு/இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு பதிவு காலதாமதக் கட்டணம் விலக்கு! மு.க.ஸ்டாலின்!


இதுகுறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் / கிராமங்களில், 1-1-2020 முதல் நிகழ்ந்த பிறப்பு/இறப்பு குறித்து காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு பிறப்பு/இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமத கட்டணத்தை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

காலதாமத கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசே ஈடுசெய்யும். எனவும் இயன்றவரை உரிய காலத்தில் பிறப்பு/இறப்பினைப் பதிவு செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டப்படுவதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”

From around the web