சிபிஎஸ்இ., +2 தேர்வுகள் ரத்து செய்யப் படுகிறதா?

 
சிபிஎஸ்இ., +2 தேர்வுகள் ரத்து செய்யப் படுகிறதா?


இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சி.பி.எஸ்.இ. படிக்கும் 10ம்வகுப்பு, +2மாணவர்களுக்கு, மே மாதம் 4 முதல் பொதுத்தேர்வு துவங்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததால், பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ., +2 தேர்வுகள் ரத்து செய்யப் படுகிறதா?

தற்போது சி.பி.எஸ்.இ.தேர்வு வாரியம் விடுத்த செய்திக்குறிப்பில் ’தற்போதைய சூழ்நிலையில் தேர்வை நடத்துவது என்பது இயலாத காரியம். எனவே தேர்வை ரத்து செய்து விட்டு முடிவுகளை எதன் அடிப்படையில் கணக்கிடுவது என்பதுபற்றி ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. 2020ஐ காட்டிலும் 4 மடங்கு மோசமான சூழ்நிலை நிலவுகிறது.

சிபிஎஸ்இ., +2 தேர்வுகள் ரத்து செய்யப் படுகிறதா?

இதனால் எந்த முடிவாக இருந்தாலும் ஜூன் மாதத்துக்கு பின் தான் இறுதி முடிவு எடுக்கப்படும். அதனால் இப்போதைக்கு தேர்வை நடத்தும் திட்டம் இல்லை’. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘முழுமையாக ரத்து செய்வதற்கு பதிலாக ஆன்லைனில் தேர்வை நடத்தலாம்’ என கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

From around the web