தமிழகத்தில் 5 மாவட்டங்களில் சூறைக்காற்றும், 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

 
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் சூறைக்காற்றும், 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

விதர்பா முதல் உள் தமிழகம் வரை (1.5 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் திருப்பூர்,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் சூறைக்காற்றும், 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

From around the web