இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் முதல்வர்!

 
இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் முதல்வர்!

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக பல பகுதிகளில் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் கர்நாடக அரசும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் முதல்வர்!

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டு சென்று துரைமுருகன் தலைமையில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தது. கர்நாடக முதல்வரும் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் முதல்வர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டெல்லி சென்றடைந்தார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று உள்ளார். இன்று பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேச இருக்கிறார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு சால்வை அணிவித்து வரவேற்றார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், திருச்சி சிவா உள்ளிட்டோர் இருந்தனர்.

From around the web