இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

 
இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் முழு ஊரடங்கில், தற்போது நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக், தேநீர் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளன.

இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

மேலும் பல்வேறு பணிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டம் பொது இடங்களில் அதிகரித்து வருகிறது. சாலைகளிலும் வாகனங்கள் அதிகமாக செல்வதை காண முடிகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் முகக்கவசம், சமூக இடைவெளி இவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!


இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக முதல்வர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளன. அதன் படி முதல்வர் ஸ்டாலின் கலெக்டர்களுடன் நடத்தும் இந்த ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் இன்று காலை 11 மணிக்கு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் இதுவரை செயல்படுத்தப் பட்டுள்ள கட்டுப்பாடுகள், நிவாரணப் பணிகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web