முதல்வரின் அடுத்த அதிரடி! ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட முடிவு!

 
முதல்வரின் அடுத்த அதிரடி! ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட முடிவு!


தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் 6,970 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் கட்டடம் கட்ட ஏதுவாக உள்ள இடங்களை கண்டறியவும், இது குறித்து கூட்டுறவு சங்கபதிவாளரிடம் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரிவான தகவல்களுடன் கூட்டுறவு சங்கபதிவாளர் மண்டல இணை பதிவாளர்களுக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web