இளைஞர்களை குறிவைத்து தாக்கும் கொரோனா 2வது அலை!

 
இளைஞர்களை குறிவைத்து தாக்கும் கொரோனா 2வது அலை!


இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் தாக்கமும், பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் முதல் அலையை காட்டிலும் அதிகரித்து வருகிறது. முதல் அலையில் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இளைஞர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவருகின்றன. அதற்கு காரணம் இளைஞர்கள் அலட்சியமாக இருப்பதுதான் என்று கூறப்படுகிறது.

இளைஞர்களை குறிவைத்து தாக்கும் கொரோனா 2வது அலை!

இளைஞர்களின் அலட்சியமான மனோபோக்கே இதற்கு காரணம் என எச்சரிக்கை விடுக்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் வெளியே சுற்றித்திரிவதும், நோய் எதிர்ப்பு சக்தியால் தொற்றை வென்றுவிடலாம் எனவும் நினைப்பதாலேயே இணை நோய் இல்லாத இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழப்பது தொடர்கிறது.

இளைஞர்களை குறிவைத்து தாக்கும் கொரோனா 2வது அலை!


இளைஞர்கள் பாதிப்பு அதிகமாகி மூச்சு திணறல் ஏற்படும் நிலையில், மருத்துவமனைக்கு வருகின்றனர்.கொரோனா வந்தால் சமூகத்தில் ஒதுக்கிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் பாதிப்பை வெளியே சொல்லாமலும் இருக்கின்றனர்.இதுவே நடக்கும் விபரீதங்களுக்கு காரணம் என்கின்றனர். அதனால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள் .

From around the web