இன்றும் கொரோனா நிவாரணம் ரூ2000/- வழங்கப்படும்!

 
இன்றும் கொரோனா நிவாரணம் ரூ2000/- வழங்கப்படும்!


தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரண நிதியாக ரூ 4000 வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி முதல் தவணையாக ரூ 2000 ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு நேற்று மே 15 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால் இந்த பணத்தை பெற வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி-நேரங்களில் சென்று வாங்க முடியாதவர்கள் மே18க்கு பிறகு வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் கொரோனா நிவாரணம் ரூ2000/- வழங்கப்படும்!

அந்தந்த பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரே‌ஷன் கடைகளுக்கு சென்று பொதுமக்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்துள்ளனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த தினமும் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.அதிலும் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் . இதை கண்காணித்து கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

இன்றும் கொரோனா நிவாரணம் ரூ2000/- வழங்கப்படும்!

.
தமிழகம் முழுவதிலும் சுமார் 2.77 கோடி அரிசி ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த பணம் உதவியாக அமையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான உதவிகளை காலதாமதம் இன்றி செய்யும் வகையில் இன்றும் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

From around the web