தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! இவற்றுக்கு தடை தொடரும் !

 
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! இவற்றுக்கு தடை தொடரும் !


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12 காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், ஜுலை 19 காலை 6.00 மணி வரை நீட்டித்து தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

  • மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
  • திரையரங்குகள்
  • அனைத்து மதுக்கூடங்கள்
  • நீச்சல் குளங்கள்
  • பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
  • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
  • உயிரியல் பூங்காக்கள்
  • நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
  • இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
    நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் ஜூலை 12 முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதி
  • கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
From around the web