மதுரை வழியாக செல்லும் ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம் !!

 
மதுரை வழியாக செல்லும் ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம் !!

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, தென்காசி வழியாக செங்கோட்டை வரை வாரம் 3 முறை இயக்கப்படும் சிலம்பு சிறப்பு ரயில் இயக்கப்படும் நாட்களில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் மும்முறை இயக்கப்படும் சிலம்பு சிறப்பு ரயில், வண்டி எண் 06182 தற்பொழுது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
வரும் செப்டம்பர் 23ம் தேதி முதல் இந்த ரயில் வியாழன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்பட இருக்கிறது.

அதே போல வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் வண்டி எண் 06181 சென்னை – எழும்பூர் செங்கோட்டை வாரம் மும்முறை சிலம்பு சிறப்பு ரயில், செப்டம்பர் 22ம் தேதி முதல் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட இருக்கிறது.

From around the web