அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ! தமிழக அரசு அதிரடி!

 
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ! தமிழக அரசு அதிரடி!


தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10 % வரை போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ! தமிழக அரசு அதிரடி!


கொரோனா காரணமாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அரசின் நிதிநிலையை மேலும் பாதித்துள்ளது. குறிப்பாக, அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் மற்றும் பல நிறுவனங்கள் இதனால் பாதிக்கபட்டுள்ளன. அவர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து முழு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ! தமிழக அரசு அதிரடி!


இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8,400/- பெறுவர். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 2.87 லட்சம் தொழிலாளர்கள் இதனால் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web