மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்

 
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தராமல் தேவையில்லாமல் சாலைகளில் நடமாடி வருவதால் பாதிப்புக்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்

முதல் அலையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்து அபராதம், வழக்குப்பதிவு சில இடங்களில் அடி என தீவிரமாக செயல்படுத்தினர். இதனால் சில நேரங்களில் சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் உருவானது.

இதனால் இந்த முறை வாகன ஓட்டிகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும், வழக்குப்பதிவு செய்யக்கூடாது என டிஜிபி போலீசாருக்கு கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்

இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்

நாளை முதல் தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை.

மே 17 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web