குட்நியூஸ்! பாதிப்பை விட குணமானவர்களின் விகிதம் அதிகரிப்பு! சுகாதாரத் துறை அமைச்சர் !!

 
குட்நியூஸ்! பாதிப்பை விட குணமானவர்களின் விகிதம் அதிகரிப்பு! சுகாதாரத் துறை அமைச்சர் !!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. தமிழகத்தில் நடைபெற்று வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகம் முழுவதும் பொது மருத்துவமனைகளை இணைத்து மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், தேவையான மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தற்போது 56,585 படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா பரவல் குறைவதற்கு இது ஒரு அடையாளமாகும்.

குட்நியூஸ்! பாதிப்பை விட குணமானவர்களின் விகிதம் அதிகரிப்பு! சுகாதாரத் துறை அமைச்சர் !!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா இறப்பு அறிவிப்பு ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படியே செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவில் தாய், தந்தையை இழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பலர் கொரோனா உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாலும் அவர்கள் இணை நோய்கள் காரணங்களால் உயிரிழந்தாலும் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. எனவே, லேசான முதற்கட்ட அறிகுறிகள் தெரிந்த உடனே மருத்துவமனையை பொதுமக்கள் அணுக வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

From around the web