ஈஷாவில் மீறப்படும் குழந்தைகளின் உரிமைகள்? உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு..!

ஈஷாவில் மீறப்படும் குழந்தைகளின் உரிமைகள்? உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு..!

கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையம் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்தது. அதுதொடர்பாக விசாரிப்பதற்கு ஈஷா அறக்கட்டளைக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி அதே ஆண்டில் ஈஷா யோக மையம் வழக்கு தொடர்ந்தது.

நீதியரசர் எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆணையத்தின் தரப்பில் ஏற்கனவே ஒரு முடிவை தீர்மானித்துவிட்டு விசாரணை நடைபெறுகிறது. குழந்தைகளுக்கு வாழ்க்கை முறைக்கு தேவையான கல்வியை மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என ஈஷா மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஈஷாவில் மீறப்படும் குழந்தைகளின் உரிமைகள்? உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு..!

இதற்கு எதிர்வாதத்தை முன்வைத்த தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையம் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் வரும்போது அதில் சம்மன் அனுப்பி விசாரிக்க, வாரியத்துக்கு அனுமதியுள்ளது என்று தெரிவித்தது.

ஈஷாவில் மீறப்படும் குழந்தைகளின் உரிமைகள்? உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு..!

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, குழந்தைகளுக்கான உரிமைகள் மீது புகார்கள் எழும் போது ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கவும், புகாரில் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பவும் உரிமையுள்ளது என்று கூறினார். அதேபோல ஈஷா குறித்த விவகாரத்தில் முன் முடிவை எடுத்துவிட்ட வழக்கை விசாரிப்பதாக ஆணையம் மீதான வாதத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.

ஈஷாவில் மீறப்படும் குழந்தைகளின் உரிமைகள்? உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு..!

அதனால் இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை முறையாகவும் நேர்மையாகவும் பாரப்பட்சமற்ற முறையில் நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்த நீதிபதி, ஈஷா அறக்கட்டளைக்கு புதிய தேதி, நேரத்தை குறிப்பிட்டு மீண்டும் சம்மன் அனுப்ப தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

From around the web