இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை !வானிலை ஆய்வு மையம்!

 
இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை !வானிலை ஆய்வு மையம்!


தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வருகிறது. இதனை குளிர்விக்கும் வகையில் இன்று காலையில் சென்னையின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து மக்களின் மனங்களை உற்சாகப்படுத்தியது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தின் மேல் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிஏற்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை !வானிலை ஆய்வு மையம்!

இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை !வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை !வானிலை ஆய்வு மையம்!

தரைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் திருச்சி பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம்.மேலும் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web