ஒழுங்கீன செயல்கள்... 4 போலீஸ் அதிகாரிகள் மீது எஸ்.பி.வருண்குமார் அதிரடி நடவடிக்கை !
ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக அடுத்தடுத்து 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருகிறார் எஸ்.பி.வருண்குமார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார். காணக் கிளியநல்லூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக இருந்தவர் ஜெயக்குமார். சுயநலமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் சண்முகசுந்தரம் திருச்சி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு ஜெயக்குமார் எஸ்.பி.யாக இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு எஸ்.பி வருண்குமார் உத்தரவிட்டார்.
இதேபோல், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழக்குகளை விசாரிக்க லஞ்சம் வாங்குவதாகவும், துறையூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் பி.சத்யராஜுக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. மேலும், ஒரு பெண்ணை 3வது திருமணம் செய்ய வற்புறுத்தினார்.
இவற்றை விசாரித்த எஸ்.பி.வருண்குமார், புகார்களுக்கு ஆளான கிருஷ்ணமூர்த்தியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்தும், சத்யராஜை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார். அடுத்தடுத்து அதிரடியாக 4 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!