வேதா நிலையம் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து மனம் திறந்த ஜெ. தீபா..!!

 
வேதா நிலையம் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து மனம் திறந்த ஜெ. தீபா..!!

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வேதா நிலையம் வீட்டை அரசுடமையாக்கியது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஜெ. தீபா, அ.தி.மு.க மேல்முறையீடு செய்தால் சட்டரீதியாக சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் வீடு அ.தி.மு.க ஆட்சியில் அரசுடமையாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் இருவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வேதா நிலையம் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து மனம் திறந்த ஜெ. தீபா..!!

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி கடந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசுடமையாக்கப்பட்ட சட்டம் செல்லாது என்று உத்தரவிட்டார். மேலும் வேதா நிலையம் வீட்டு சாவியை இன்னும் 3 வாரங்களில் தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவில் குறிப்பிட்டார்.

இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஜெ. தீபா, நியாயமான தீர்ப்பு வழங்கி சட்டம் நிலைநாட்டப்பட்டுள்ளது. வழக்கு நடந்த போது எவ்வித இடர்பாடுகளும் ஏற்படவில்லை. அதிமுக தரப்பில் மட்டுமே எதிர்ப்புகள் இருந்தன.

வேதா நிலையம் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து மனம் திறந்த ஜெ. தீபா..!!

தீர்ப்பில் சொல்லப்படுள்ள நடைமுறைகளை பின்பற்றி வேதா நிலையம் வீட்டின் சாவியை பெறுவோம். வேதாநிலையம் அ.தி.மு.க-வினரின் கோயில் என்று சொல்லப்படுவதை நானும் ஏற்கிறேன். ஆனால் அதை உடமையாக கருவது தவறு.

அதிமுக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். வேதா நிலையம் வீட்டின் சாவியை பெற்றுவிடுவதோடு எல்லாம் முடிந்துவிடாது. அடுத்த நிறைய சம்பிரதாயங்கள் உள்ளன. சட்ட விதிகளை முழுமையாக தெரிந்துகொண்ட பிறகு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று ஜெ. தீபா கூறினார்.

From around the web