தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்கு?!

 
தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்கு?!


தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை லாட்டரி விற்பனை சக்கை போடு போட்டது. இந்தியாவின் சில மாநிலங்களில் அரசு அனுமதியுடன் லாட்டரி சீட்டு விற்பனை நடபெற்று வருகிறது; சில மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில் தமிழக அரசு மீண்டும் லாட்டரி விற்பனை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கெனவே, தமிழக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்கு?!

தற்போது இதை உறுதி செய்யும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரைக்கு வருகை தந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இதனால், தமிழகத்தில் விரைவில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர்களின் சந்திப்பு குறித்து சிலர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் கூறியதாவது, பிற மாநில லாட்டரிகளை தமிழகத்திற்குள் விடாமல் கேரள மாநிலத்தை போல் தமிழக அரசே லாட்டரி விற்பனையை நடத்தும் என்று தெரிவித்தனர். இதற்கான முறையான அறிவிப்பு தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் லாட்டரி விரும்பிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

From around the web