ஊரடங்கில் விலங்குகளின் உணவுக்கு புதிய திட்டம்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

ஊரடங்கில் விலங்குகளின் உணவுக்கு புதிய திட்டம்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இந்த கொரோனா கால கட்டத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பொதுமக்களுக்கு அம்மா உணவகம், சமூக ஆர்வலர்கள் மூலம் உணவு வழங்கல் என பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கில் விலங்குகளின் உணவுக்கு புதிய திட்டம்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

அதே நேரத்தில் தெரு ஓரங்களில் கைவிடப்பட்ட விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தேவை குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தெரு நாய்களுக்கு உணவளிக்க கவர்னர் ரூ.10 லட்சம், தமிழக அரசு 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கில் விலங்குகளின் உணவுக்கு புதிய திட்டம்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

தெரு விலங்குகளின் பாதுகாப்பிற்கும் நாய்களுக்கு கருத்தடை நடைமுறையை செய்வதற்கும் புதிய திட்டம் வகுக்கப்பட வேண்டும்.மேலும், கொரோனா அதிகரிப்பு காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் விலங்குகளுக்கு தடையில்லாமல் உணவு கிடைப்பதற்கான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web