தாமதமாக வரி செலுத்துவோருக்கு ‘செக்’ வைக்கும் தமிழக அரசு..!!

 
தாமதமாக வரி செலுத்துவோருக்கு ‘செக்’ வைக்கும் தமிழக அரசு..!!

சட்டப்பேரவையில் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழகத்தில் தற்போது பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் முறையாக வரி செலுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து கண்காணிக்கும் விதத்திலும், தாமதமாக வரி செலுத்துவதை தவிர்க்க ஏதுவாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

தாமதமாக வரி செலுத்துவோருக்கு ‘செக்’ வைக்கும் தமிழக அரசு..!!
மூர்த்தி, வணிக வரித்துறை அமைச்சர்

அதை செயல்படுத்தும் விதமாக அழைப்பு மையங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ. 5.45 கோடி மதிப்பில் அமையும் இந்த மையங்கள் தனிநபர்கள், மற்றும் நிறுவனங்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா என்பதை கண்காணிக்கும்.

மேலும் மக்கள் தாமதமாக வரி செலுத்துவதை தவிர்க்கும் விதமான நடவடிக்கைகளையும் இந்த மையங்கள் மேற்கொள்ளும். முதற்கட்டமாக 40 மையங்களை கொண்டு இந்த அழைப்பு மையங்கள் இயங்கும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web