எம்.பி.க்கள் டெல்லிக்கு வர உத்தரவு ! ஸ்டாலின் அதிரடி !

 
எம்.பி.க்கள் டெல்லிக்கு வர உத்தரவு ! ஸ்டாலின்  அதிரடி !

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தின் தேவைகள், தடுப்பூசிகள் குறித்து பிரதமர் மோடியை ஸ்டாலின் நேரில் சந்திக்க இருக்கிறார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி செல்ல உள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லவிருப்பதால் இந்த பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி.க்கள் டெல்லிக்கு வர உத்தரவு ! ஸ்டாலின்  அதிரடி !

முதலமைச்சராக சென்று அங்கு பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார்.
அப்போது, தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுவார் எனவும், அதற்கான மனுக்களையும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடன் ஜூன்17ம் தேதி மு.க. ஸ்டாலின் சந்திப்பு உறுதியானது. மறுநாள் 18ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

எம்.பி.க்கள் டெல்லிக்கு வர உத்தரவு ! ஸ்டாலின்  அதிரடி !


இதையடுத்து, திமுக எம்.பி.க்கள் அனைவரும் டெல்லிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வாய்மொழி உத்தரவாக இதனை பிறப்பித்துள்ளார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ள நிலையில், கட்சியின் எம்.பி.க்கள் அனைவரும் டெல்லியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது

From around the web