புதிய கல்விக்கொள்கை தமிழகத்தில் நுழைய வாய்ப்பில்லை!உயர்கல்வி அமைச்சர் பொன்முடி !

 
புதிய கல்விக்கொள்கை  தமிழகத்தில் நுழைய வாய்ப்பில்லை!உயர்கல்வி அமைச்சர் பொன்முடி !


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கல்வி முறைகள் குறித்து கல்வி அமைச்சர் பொன்முடி விடுத்த செய்திக்குறிப்பில் உயர்கல்வித்துறை செயலாளரும் புதிய கல்விக்கொள்கையில் இருக்கக்கூடிய குறைகளை பற்றி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்.

புதிய கல்விக்கொள்கை  தமிழகத்தில் நுழைய வாய்ப்பில்லை!உயர்கல்வி அமைச்சர் பொன்முடி !

புதிய கல்விக்கொள்கை நிச்சயமாக தமிழ்நாட்டில் நுழைய முடியாது எனவும், மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.இப்போது உயர்கல்வித்துறை செயலாளரும் புதிய கல்விக்கொள்கையில் இருக்கக்கூடிய குறைகளை பற்றி தெரிவித்துள்ளார். அதனை முறைப்படி ஆய்வு செய்து நிச்சயமாக மாநில உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவோம். புதிய கல்விக் கொள்கை நிச்சயமாக தமிழ்நாட்டில் நுழைய வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.

From around the web