கர்நாடகா: தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரானா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

 
கர்நாடகா: தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரானா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அது டெல்டா வகையை சார்ந்தது அல்ல என கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதா? என அச்சம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா: தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரானா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களாக அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய வைரஸ் இதுவரை 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஒமிக்ரான் வைரஸை தடுக்க முன்னெச்சரிகை நடவடிக்கை எடுத்து வருகின்றன. பல நாடுகள் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடாக மாநிலத்திற்கு வந்துள்ள இரண்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நபருக்கு இருப்பது டெல்டா வைரஸ் இல்லை என்று தெரிய வருகிறது. இதனையடுத்து அவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் அம்மாநில மக்களிடையே ஏற்பட்டது.

கர்நாடகா: தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரானா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

இது தொடர்பில் அம்மாநில சுகாதாரத்துறை கே. சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ‘தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய இருவரில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பதாக தகவல் பரவுகிறது. ஆனால், அதைப்பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் தற்போது சொல்ல முடியாது. ஒமிக்ரான் குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அது தொடர்பான அனைத்து தகவல்களும் டிசம்பர் 1 ஆம் தேதி கிடைக்கும். மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு பின்னரே எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்’ என்று கூறினார்.

மேலும் ஒமிக்ரான் வேகமாக பரவினாலும், டெல்டா போல ஆபத்தானது அல்ல. எனவே, மருத்துவமனையில் சிகிச்சையும் தேவைப்படுவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

From around the web