இன்றுமுதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது!பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

 
இன்றுமுதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது!பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப் பட்டுள்ளது. இது தவிர பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இரவு ஊரடங்கில் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு விரைவுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை பகலில் இயக்கி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்றுமுதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது!பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

இதனால் பகல் பொழுதில் தொலைதூர ஊர்களுக்கு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகமும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் முடிவு செய்யப்பட்டு அதன் படி நேற்று காலையில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. பகல் நேரங்களில் சாதாரணமாக சென்னையிலிருந்து நாள் ஒன்றுக்கு 400 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்றுமுதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது!பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!

ஆனால் ஆம்னி பேருந்துகளை பகலில் இயக்குவதில் இருக்கும் நடைமுறை சிக்கல் காரணமாக அறிவிக்கப்பட்ட அளவுக்கு பேருந்துகளை இயக்க வழியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது எனவும், பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணத்தொகை திருப்பி வழங்கப்படும் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

From around the web