மதுரைக்கு ரயிலில் கொண்டு வரப்படும் ஆக்சிஜன் !

 
மதுரைக்கு ரயிலில் கொண்டு வரப்படும் ஆக்சிஜன் !


தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பாதிப்புக்களும், உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.அந்த வகையில் மதுரையிலும் கொரோனா 2வது அலையில் தினமும் 1000திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து இங்கும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மதுரைக்கு ரயிலில் கொண்டு வரப்படும் ஆக்சிஜன் !

இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க தென்னக ரெயில்வே ஏற்பாடு செய்து வருகிறது.
இதன் அடிப்படையில் திருவள்ளூரில் இருந்து 2 கிரையோஜனிக் காலி டேங்கர்கள் ஒரிஸ்ஸாவில் இருந்து ரயிலில் 7 பிளாட் வேகன்கள் இணைக்கப்பட்டு அதில் 2 டேங்கர் லாரிகள் ஏற்றப்பட்டு ஆக்சிஜன் கொண்டு வரப்பட உள்ளது.

மதுரைக்கு ரயிலில் கொண்டு வரப்படும் ஆக்சிஜன் !


இந்த ரயில் வரும் கிரீன் காரிடர் வழித்தடத்தில் எல்லா ரயில் நிலையங்களிலும் பச்சை சிக்னல் பெற்று எங்கும் நிற்காமல் விரைவாக செல்லும் வகையில் இயக்கப்படும்.
இவை சென்னை வந்து சேர்ந்தவுடன், டேங்கர் லாரிகள் உடனடியாக தேவைப்படும் உரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த ரெயில் வியாசர்பாடி திருவெற்றியூர் கூடூர், பிட்ரகுண்டா, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் வழியாக 168.5 கிலோமீட்டர் பயணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web