ஜூலை 19ல் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

 
ஜூலை 19ல் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.

மேலும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.gov.in, www.dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை காணலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், பள்ளி மாணவர்கள் 22 ஆம் தேதி காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web