குடை பிடித்தால் மட்டுமே குவாட்டர்! அதிரடி அறிவிப்பு !!

 
குடை பிடித்தால் மட்டுமே குவாட்டர்! அதிரடி அறிவிப்பு !!


தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் திறக்கப்படவில்லை.

குடை பிடித்தால் மட்டுமே குவாட்டர்! அதிரடி அறிவிப்பு !!


இதனால் அந்த 11 மாவட்டங்களில் உள்ள மதுபானப்பிரியர்கள் அண்டை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். மேலும் டாஸ்மாக் முன்பு நிண்ட வரிசையில் கூட்டமாக மதுபாட்டில்கள் வாங்க காத்திருக்கும் நிலையை காணமுடிந்தது. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் புறநகர் பகுதியில் உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வருகிறது . பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் குடை மற்றும் ஆதார் அட்டை இல்லாதவர்கள் மது வாங்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடை பிடித்தால் மட்டுமே குவாட்டர்! அதிரடி அறிவிப்பு !!


மேலும் போலீசார் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டு வருவதற்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படுமென ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். குடை மற்றும் ஆதார்அட்டை இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

From around the web