தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக் கொண்டார்

 
தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக் கொண்டார்

தமிழகத்தின் 14-வது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை தொடர்ந்து, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் 15-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1976-ம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான ஆர்.என்.ரவி மத்திய அரசு உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என். ரவி இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக் கொண்டார்

புதிய ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்கள் பரிசளித்தார்.மேலும் சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

புதிய ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர், அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் கலந்து கொண்டனர்.

From around the web