மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, தமிழகத்தை ஒட்டிய கர்நாடகா மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மற்றும் கன மழை காரணமாக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 72.55 அடியாக இருந்த நிலையில் இன்று 73.27 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 19,665 கன அடியாக உயர்ந்துக்கது. மேட்டூர் அணையில் தற்போது 35.27 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.

From around the web