வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!

 
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரியிருந்தது. அதன் அடிப்படையில் அப்போதைய அரசு வன்னியர், சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் வன்னியர்கள் 10.5 சதவிகிதம், சீர்மரபினர் 7 சதவிகிதம், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5 சதவிகிதம் சிறப்பு உள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26ம் தேதி முதல் சிறப்பு ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் எனவும், இது குறித்து சட்ட வல்லுநர்கள் , டிஎன்பிஎஸ்சியுடன் கலந்தாலோசித்து சிறப்பு ஒதுக்கீட்டை செயல்படுத்தப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு முதல் புதிய சிறப்பு ஒதுக்கீடு முறையில் தொழில்கல்வி உள்பட அனைத்து கல்வியிலும் சேர்க்கை நடைபெறும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

From around the web