தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

 
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித்துக்கு சமீபத்தில் கூடுதலாக பஞ்சாப் ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவரை நியமனம் செய்து இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

ஆர் என் ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

நாகலாந்து ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். நாகலாந்து ஆளுநராக பதவி அசாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முக்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.

உத்தரகாண்ட் ஆளுநராக பதவி வகித்த பேபி ராணி மவுரியாவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் புதிய ஆளுநராக குர்மித் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

From around the web