அதிர்ச்சி! உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் கொரோனாவுக்கு பலி!

 
அதிர்ச்சி! உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் கொரோனாவுக்கு பலி!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த 2வது அலை மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. முதலில் அமெரிக்கா நியூயார்க் சிட்டியில் உள்ள டிரேன்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் புலி கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த வரிசையில் இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

அதிர்ச்சி! உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் கொரோனாவுக்கு பலி!

அதே போல் சென்னையில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலும் மே 26 முதல் பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு தொடர் இருமல் இருந்து வந்தது. உடனடியாக உடல் சோர்வுடன் காணப்பட்ட சிங்கங்களின் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அதில் ஏற்கனவே 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில் தற்போது கவிதா (23), புவனா (19) என்ற 2 பெண் சிங்கங்களின் உடல் நிலையும் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இதனையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மற்ற உயிரினங்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதிர்ச்சி! உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் கொரோனாவுக்கு பலி!

இதில் 19 வயது உடைய ஆண் சிங்கம் சார்ஸ் கோவிட்-2, டிஸ்டெம்பர் என்ற புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சிங்கத்தை தனிமைப்படுத்தி தொடர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய வகை சார்ஸ் கோவிட்-2 டிஸ்டெம்பர் முதிர்ந்த விலங்குகளை விட, இளம் வயதுடைய விலங்குகளை அதிக அளவில் தாக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு இந்த புதிய வகை தொற்று பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது.

From around the web