சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி இன்று பதவி ஏற்பு!

 
சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி இன்று பதவி ஏற்பு!


தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். ஸ்டாலின் முதல்வராகவும், 33 அமைச்சர்களும் மே 7ம் தேதி பதவியேற்றனர்.இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் நேற்று பதவியேற்றனர். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பொறுப்பு ஏற்றனர்.

சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி இன்று பதவி ஏற்பு!


முதல்வர் .க.ஸ்டாலின் அவரை தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர். முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியும் பதவியேற்றுக் கொண்டார். அதன்பின்னர், பிற கட்சியின் சட்டமன்ற தலைவர்கள் ,முன்னாள் அமைச்சர்கள்,அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 223 பேர் பதவி ஏற்றனர்.

சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி இன்று பதவி ஏற்பு!


இதில் எஸ்.எஸ்.சிவசங்கர்,மா.மதிவேந்தன்,காந்திராஜன் (வேடசந்தூர்), சண்முகையா (ஒட்டப்பிடாரம்), வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), வெங்கடாச்சலம் (அந்தியூர்) ஆகியோர் பதவியேற்கவில்லை.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி), டாக்டர் விஜயபாஸ்கர் (விராலிமலை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் பதவியேற்கவில்லை. அவர்கள் அனைவரும் இன்று பதவியேற்கின்றனர். இன்று சபாநாயகராக மு.அப்பாவுவும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் பொறுப்பேற்கின்றனர். சபாநாயகர் மு.அப்பாவு தொடர்ந்து அவையை நடத்துவார்.

From around the web