குஷியில் மாணவர்கள் ! இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது! கல்வி அமைச்சர் திட்டவட்டம்!

குஷியில் மாணவர்கள் ! இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது! கல்வி அமைச்சர் திட்டவட்டம்!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தினமும் குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து சேர்க்கை நடத்த அந்தந்த பள்ளிகள் திட்டமிட்டு வருகின்றன.

குஷியில் மாணவர்கள் ! இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது! கல்வி அமைச்சர் திட்டவட்டம்!

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முழுவதும் முடிந்தபிறகு பிற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களுக்கு 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர் சேர்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஷியில் மாணவர்கள் ! இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது! கல்வி அமைச்சர் திட்டவட்டம்!

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்த செய்திக்குறிப்பில் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 11 ம் வகுப்பு மாணவர் சேர்க்கை 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
மேலும் தற்போதைய நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்தும் நிலை குறித்து யோசிக்க வில்லை.

கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ் ஆப் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வரும் அதே முறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இது தவிர தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். அதற்குமேல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web