நீட் எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும்

 
நீட் எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும்

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வுகள் கட்டாயம் என்ற உத்தரவு அமுலில் உள்ளது. இதனையடுத்து ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12-ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது கடந்த 16-ம் தேதி முதல் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஆகும்

நாளை காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

From around the web