11 மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பு! முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை ?

 
11 மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பு! முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை ?

தமிழகத்தில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து மே 10ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு இன்னும் குறையாத சில மாவட்டங்களில் தளர்வில்லாத ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

பாதிப்பு வாரியாக மாவட்டங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதில், முதல் பிரிவு மாவட்டங்களில் அதிக கட்டுப்பாடுகளும், இரண்டாவது பிரிவு மாவட்டங்களில் குறைவான கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளது.

11 மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பு! முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை ?

மூன்றாம் பிரிவில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பொதுபோக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் மற்றும் புறநகர் ரயில் சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 28ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள அந்தக் கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

11 மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பு! முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை ?

பாதிப்பு அதிகம் உள்ள 3 வகை 11 மாவட்டங்களில் இறைச்சி, மீன் கடைகள் திறக்கவும், மளிகை கடைகளையும் கூடுதல் நேரம் திறக்கவும் அனுமதி அளிக்கப்படலாம். மேலும் இந்த 11 மாவட்டங்களில் குறைவான நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்படலாம் எனவும் மக்களிடையே எதிர்ப்பார்ப்புக்கள் உருவாகியுள்ளன.

From around the web