ரேஷன் கடைகளுக்கு இந்த 3 நாட்களுக்கு விடுமுறை

 
ரேஷன் கடைகளுக்கு இந்த 3 நாட்களுக்கு விடுமுறை

தமிழகத்திலுள்ள பொது விநியோகத் திட்டதின் கீழ் ரேஷன் கடைகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தோறும் சென்று டோக்கன் வழங்கும் பணி மற்றும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் நிவாரண தொகை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா நிவாரணத் தொகை வழங்குவதற்காக விடுமுறை நாட்களான 16.5.2021(மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை), 04.06.2021 மற்றும் 11.06.2021 (மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை) ஆகிய விடுமுறை நாட்களில் கடைகள் செயல்பட்டதிற்கு பதிலாக 17.07.2021 (மூன்றாவது சனிக்கிழமை), 24.07.2021 (நான்காவது சனிக்கிழமை) மற்றும் 14.08.2021 (இரண்டாவது சனிக்கிழமை) ஆகிய நாட்களில் ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்துள்ளது.

From around the web