ஒரு கிலோ தக்காளி ரூ. 85-க்கு விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு..!

 
ஒரு கிலோ தக்காளி ரூ. 85-க்கு விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு..!

தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பண்ணைப் பசுமை கடைகளில் கிலோ தக்காளிக்கு ரூ. 85 முதல் ரூ. 100 வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மழை காரணமாக தமிழ்நாட்டில் காய்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 110 முதல் ரூ. 130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ தக்காளி ரூ. 85-க்கு விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு..!

இதனால் சாமானியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் தக்காளி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனையை முன்னெடுக்க கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதுமுள்ள சுமார் 65 கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்கப்படவுள்ளது. அதன்படி சென்னை, கோவை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் தக்காளி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஒரு கிலோ தக்காளி ரூ. 85-க்கு விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு..!

இதற்காக நாள் ஒன்றுக்கு 14 டன் தக்காளி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. விரைவிலேயே இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, குறைந்த விலையில் மக்களுக்கு தக்காளி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

From around the web