இன்றைய சட்டப்பேரவை முழுத் தொகுப்பு 12-05-2021.

 
இன்றைய சட்டப்பேரவை முழுத் தொகுப்பு 12-05-2021.
  1. தமிழக சட்டப் பேரவையின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது சட்டப்பேரவை சபாநாயகர் ஆக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அப்பாவு பதவி ஏற்றுக்கொண்டார், சபாநாயகர் அப்பாவுவை, அவை முன்னவர் துரைமுருகன் இருக்கையில் அமர வைத்தார்
  2. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சபாநாயகரை இருக்கையில் அமர வைத்தார்
  3. சட்டப்பேரவையில் துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்
  4. பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் ஜி.கே மணி பேச்சு: முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள கலைஞர் அவர்களின் மகன் தளபதிக்கு என் வாழ்த்துக்கள்.

    நல்ல ஆட்சி நடத்தும் ஆட்சிக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குவது எதிர்க்கட்சிகள் தான்! அதலால் நல்ல வாய்ப்புகளை எதிர்கட்சிகளுக்கு வழங்குவீர் என நம்புகிறோம்.

    பாட்டாளி மக்கள் கட்சி என்றும் அவைக்கு உறுதுணையாக இருக்கும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அவை தலைவருக்கு என் வாழ்த்துக்கள்.

    அவையின் துணை தலைவருக்கும் என் வாழ்த்துக்கள்! நீங்களும் அவையை சீராக நடத்துவீர் என நம்புகிறோம்.
  1. தமிழக சட்டமன்றத்தின் பாரதிய ஜனதா கட்சியின் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு : ஒரு நல்ல மாமனிதர் பேரவையின் தலைவர் என்பதில் மற்றவர்களை காட்டிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    என்னை சட்டமன்றவரை வர வாய்ப்பு அளித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா மற்றும் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு இக்கணம் என் நன்றி.

    என்னை தேர்தெடுத்த என் தொகுதி மக்களுக்கு என் நென்சார்ந்த நன்றிகள்.

    சட்டப்பேரவையில் எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் எண்ணங்களின் அடிப்படையில் நேரம் வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.அதே நேரத்த்தில், நியாயத்தின் அடிப்படையில் சட்டப்பேரவையில் தீர்ப்பு வழங்க வேண்டும்.மேலும், உங்களின் தீர்ப்பு எல்லா சட்டமன்ற உறுப்பினருக்கும் சமாக இருக்க வேண்டும்.

    சட்டப்பேரவையின் துணை தலைவர் கு.பிச்சாண்டி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  1. சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவு க்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.

    பேரவையில் நடுநிலை தவறாமல் சட்டமன்ற பணிகளை நடத்தி, சீரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    அதிமுக வின் முதலமைச்சர் வேட்பாளராக என்னை தேர்வு செய்த கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
  1. சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவரும் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் சட்டப்பேரவையில் வாழ்த்திப் பேசினார் அப்போது பேசிய அவர்,

    வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த மாமன்றத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்பாவு அவர்களுக்கும், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் பிச்சாண்டி அவர்களுக்கும் எனது சார்பிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விடியல் எல்லா நாளும் விடிகிறது ஆனால் அந்த விடியல் எல்லோருக்குமான வெளிச்சமாக இருக்க வேண்டும். இந்திய நாடே வியக்கத்தக்க வகையில் தமிழக முதல்வரின் முதற்கட்ட நடவடிக்கைகள் பெருமைப்படும் அளவிற்கு இருக்கிறது

    இதனை இவன் கண் விடல் என்ற அய்யன் திருவள்ளுவரின் மகத்தான வாக்கிற்கேற்ப மாண்புமிகு முதல்வர் அவர்கள் பேரவைத் தலைவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார் அதற்கு முதல்வருக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறேன் என் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த மாமன்றத்தை வாசித்திருக்கிறோம் முதல் முறையாக மாமன்றத்தில் வந்து பேசுகிறோம் இந்த வாய்ப்பிற்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஜனநாயக மரபுகளை பாதுகாக்க வேண்டிய நெருக்கடியான சூழலில் இந்த தேசம் இருக்கிறது. ஜனநாயக மரபு நிறைந்த இந்த மண்ணில் ஜனநாயகத்தை காப்பாற்றும் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் தமிழக முதல்வரை வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்.
From around the web