இன்று முதல் ரே‌ஷன் கடைகளில் டோக்கன்!

 
இன்று முதல் ரே‌ஷன் கடைகளில் டோக்கன்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000/- வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று முதல் ரே‌ஷன் கடைகளில் டோக்கன்!


இதன்படி மேமாதத்தில் ரூ.2000/- நிவாரணத் தொகை ரே‌ஷன் கடைகளில் வழங்கப்பட்டது.இந்நிலையில் இந்த மாதத்திற்குரிய 2வது தவணையாக ரூ.2000/- நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பும் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜூன் 11 நாளை முதல் ஜூன் 14 வரை இதற்கான டோக்கன்களை ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 15 முதல் ரே‌ஷன் கடைகளில் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2000/- நிவாரணமும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரிசி கார்டுதாரர்கள் மொத்தம் 2.11 கோடி குடும்பத்தினர் பயன் அடைவர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று முதல் ரே‌ஷன் கடைகளில் டோக்கன்!


14 வகை மளிகைப்பொருட்கள் விபரம்
கோதுமை மாவு-1 கிலோ
உப்பு -1 கிலோ
சர்க்கரை-500 கிராம்
உளுத்தம்பருப்பு- 500 கிராம்
புளி-250 கிராம்
கடலை பருப்பு-250 கிராம்
கடுகு-100 கிராம்
சீரகம்-100 கிராம்
மஞ்சள் தூள்-100 கிராம்
மிளகாய் தூள்-100 கிராம்
டீத்தூள் -100 (2 பாக்கெட்டுகள்)
குளியல் சோப்-1 (125 கிராம்)
சலவை சோப்-1 (250 கிராம்) ஆகிய 14 பொருட்கள் சிறப்பு தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

From around the web