நாளை ! +2 மாணவர்களே தயாராக இருங்கள்! மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் இணையதளங்கள்!

 
நாளை ! +2 மாணவர்களே தயாராக இருங்கள்! மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் இணையதளங்கள்!


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து தேர்வுத்துறை வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 20 சதவீதம், 12ம் வகுப்பு செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாளை ! +2 மாணவர்களே தயாராக இருங்கள்! மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் இணையதளங்கள்!


அந்தவகையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதற்கான தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? என்பது மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில் நாளை ஜூலை 19ம் தேதி காலை 11 மணிக்கு http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in மற்றும் http://www.dge.tn.gov.in இணையதளங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

நாளை ! +2 மாணவர்களே தயாராக இருங்கள்! மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் இணையதளங்கள்!

அதைப்போல மாணவர்கள் பள்ளியில் சமர்பித்த அலைபேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் .
22.07.2021 அன்று காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

From around the web