தமிழகத்தில் நாளை 18 நகரங்களில் நீட் தேர்வு

 
தமிழகத்தில் நாளை 18 நகரங்களில் நீட் தேர்வு

இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வு எழுத வேண்டியது கட்டாயம். அதன்படி நடப்பு 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான பயிற்சியில் மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை 18 நகரங்களில் நீட் தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் இன்று செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் இத்தேர்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, திருப்பூர், சேலம், கடலூர், காஞ்சிபுரம், கரூர், நாகர்கோவில், நாமக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 18 நகரங்களில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறும்.

தமிழகத்தில் நாளை 18 நகரங்களில் நீட் தேர்வு

தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு நடைபெறும் நகரங்களில் அதற்கான ஏற்பாடுகளை தேசிய கல்வி முகமை செய்துள்ளனர்.

மேலும் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட வேண்டும்.

தமிழகத்தில் நாளை 18 நகரங்களில் நீட் தேர்வு

தேர்வு மையத்துக்குள் மின்னணு பொருட்கள் கொண்டுவர அனுமதியில்லை. முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்துவரக் கூடாது. சாதாரண செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

From around the web