வைகை, முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகா நதி அணைகளின் நீர் நிலவரம்..

வைகை, முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகா நதி அணைகளின் நீர் நிலவரம்..

வைகை, முல்லைப் பெரியாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் அமைந்துள்ளது வைகை அணை. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

வைகை, முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகா நதி அணைகளின் நீர் நிலவரம்..

இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 69.49 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 2,649 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக ஆற்றில் விநாடிக்கு 5,119 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 5,698 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை, முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகா நதி அணைகளின் நீர் நிலவரம்..

142 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 141.50 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு 4,169 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக 2,300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 7,531 மில்லியன் கன அடியாக உள்ளது.

57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, தற்போது அணைக்கு 100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 435.32 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை, முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகா நதி அணைகளின் நீர் நிலவரம்..

126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு 137 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை, முல்லைப் பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகா நதி அணைகளின் நீர் நிலவரம்..

52.55 அடி உயரம் கொண்ட சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 15 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 78.27 மில்லியன் கன அடியாக உள்ளது.

From around the web